உயர்கல்வியை ஊக்குவித்தல்: உதவித்தொகை திட்டம்
2014-15 நிதியாண்டில் எம்.எம்.எஃப்.எஸ்.எல் கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உயர் கல்வியைப் பெற உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் துவக்கியது. இத்திட்டத்தின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
குறிக்கோள்: எம்.எம்.எஃப்.எஸ்.எல் இன் உதவித்தொகை திட்டம் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உதவித்தொகை முதுகலை மாணவர்களுக்கு 25,000 ரூபாயும், கல்லூரிகளில் படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு 10,000 ரூபாயும் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ள கல்லுாரிகளுக்கு பொருந்தும்.
திட்டத்தின் காலவரை: ஜூலை முதல் ஜனவரி வரை
பயனாளிகள்: கிராமப்புற இந்தியாவிலிருந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்து சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவான வீட்டு வருமானம் உள்ளவர்களை எம்.எம்.எஃப்.எஸ்.எல் இலக்கு வைத்துள்ளது.
- நேரடி பயனாளிகள்: இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள்.
- மறைமுக பயனாளிகள்: சமுதாயம் மற்றும் இளைஞர்களின் குடும்பங்கள்
மஹிந்திரா நிதி உதவித்தொகை திட்டத்தின் பயனாளிகள் ஒட்டுமொத்த எண்ணிக்கை: 8700 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை உயர் படிப்பைத் தொடர ஊக்குவித்துள்ளது.
இத்திட்டம் : மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடக, குஜராத் மற்றும் ராஜாஸ்த்தான்.ஆகிய மாநிலத்தில் உள்ளன.
ஹுன்னார்: திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சியை ஊக்குவித்தல்
நிதி தொடர்பான திறன்களில் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒரு திட்டத்திற்கு எம்.எம்.எஃப்.எஸ்.எல் தனது ஆதரவை வழங்குகிறது. எம்.எம்.எஃப்.எஸ்.எல் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட தொகுதியின் உள்ளடக்கங்களை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
குறிக்கோள்: இந்தத் திட்டத்திற்கான ஹயர்-டிரைன்-டிப்லாய் (HTD) மாதிரி மூலம், எம்.எம்.எஃப்.எஸ்.எல் கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இந்தத் துறையில் நுழைவு நிலை பதவிகளில் வேலைவாய்ப்பைப் பெற உதவும்.
திட்டத்தின் காலவரிசை: ஜூலை முதல் ஜனவரி வரை
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: வேலைவாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இந்தியாவில் இருந்து திறமையற்ற இளைஞர்கள்.
- மறைமுக பயனாளிகள்: சமூகங்கள் மற்றும் இளைஞர்களின் குடும்பங்கள்
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: 2200 க்கும் மேற்பட்ட வேலையற்றோர், திறமையற்ற இளைஞர்கள் நிதித் திறன் குறித்த பயிற்சி பெற்றனர். அவர்களில், 1122 பேர் சான்றிதழ் பெற்றனர் மற்றும் 600 க்கும் மேற்பட்டவர்கள் பி.எஃப்.எஸ்.ஐ துறையில் நுழைவு நிலை வேலைகளைப் பெற்றனர்
இடம்: உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்
ஹுன்னார்: பெண்களுக்காண வாழ்வாதாரப் பயிற்சிி
2015-16 ஆம் ஆண்டில், எம்.எம்.எஃப்.எஸ்.எல் ஒரு தனித்தன்மை திட்டத்தை உருவாக்கியது, இது ஒதுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை சிறந்த ஓட்டுனராக மாற்றுவதற்கான திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;
குறிக்கோள்: பெண்களின் வேலைவாய்ப்பு திட்டங்கள் பெண்கள் பாரம்பரியமாக செய்ய வேண்டிய செயல்பாடுகளுடன் தொடர்புடையவை எ.கா. சமையல், தையல் போன்றவை. எம்.எம்.எஃப்.எஸ்.எல் ஒரு திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்தது, இது பெண்களுக்கு பணம் சம்பாதிக்க பாரம்பரியம் அல்லாத வழிமுறைகளை கற்பிப்பது, அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை வேலைக்கு அமர்த்துவதும் ஆகும். எம்.எம்.எஃப்.எஸ்.எல் பெண்களின் அதிகாரத்தை ஒரு முக்கியமானதாக கருதுகிறது, இதனால்தான் இதை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. பாரம்பரியம் அல்லாத வேலைவாய்ப்புக்கான பெண்கள் சங்கம் (ANEW) மற்றும் ஆசாத் அறக்கட்டளை ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ததிட்டத்தின் காலவரைை: ஜனவரி முதல் டிசம்பர் வரைை
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: வசதியான அல்லது ஏழ்மை பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கும், திறமையை வளத்துகொள்ள விரும்பும் பெண்களுக்கும் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- மறைமுக பயனாளிகள்: பெண்களின் குடும்பங்கள் மற்றும் அவர்கள் வாழும் சமுதாயம்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: 450 க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சிக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 210 பேர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்தையும், 110 க்கும் மேற்பட்ட பெண்கள் தொழில்முறை ஓட்டுனர்களாகவும் பணியாற்றினர்.
இடம்: மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடக மேற்கு வங்கம் & தமிழ்நாடு.
ஹுன்னார்: மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் பயிற்சி (PwD)
எம்.எம்.எஃப்.எஸ்.எல் சர்தக் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து மத்தியப் பிரதேசத்தின் போபாலில் திறன் அடிப்படையிலான பயிற்சி மையத்தைத் துவக்கியது, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு தலைமைதத்துவம், சமூக, தகவல் தொடர்பு, கணினிகள் மற்றும் அடிப்படை வாழ்வாதார திறன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறது.
18 முதல் 30 வயதுவரை உள்ள இளைஞர்களுக்கு 3 மாத பயிற்சித் திட்டம் 3 துறைகளில் அளிக்கபடுகிறது அதாவது ஐடி-ஐடிஇஎஸ், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், ஆர்கனைஸ்டு ரீடைல் மற்றும் பாங்கிங் மற்றும் பினன்ஷியல் லிட்ரசி போன்றவை அடங்கும்.
பயிற்சித் திட்டத்தை முடித்த பின்னர், எங்கள் சிறந்த வேலைவாய்ப்பு குழு பல்வேறு துறைகளில் வேலைகிடைக்க உதவி செய்கிறார்கள். அதாவது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், ஆர்கனைஸ்டு ரீடைல் அண்ட் ஐடி – ஐடிஈஎஸ் போன்றவை அடங்கும். வேலைவாய்ப்பு கண்காட்சிகள், வேலைவாய்ப்பு இயக்கிகள், நேர்காணல் இயக்கிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் அனைவருக்கும் வேலை கிடைக்க முயற்சிக்கின்றனர்.
குறிக்கோள்: வவேலை மேப்பிங் டிரைவ்களை நடத்துவதன் மூலமும், இளைஞர்களை திறமையானவர்களாக மாற்றி பல்வேறு தொழில் துறைகளில் அவர்களை திறமையான பணி புரிய உதவுவது.
திட்டத்தின் காலவரை: செப்டம்பர் முதல் அக்டோபர் வரைை
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: வேலைவாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பி.டபிள்யூ.டி.
- மறைமுக பயனாளிகள்: PwD யை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்்
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கைை: சுமார் 200 PwD பயிற்சி பெற்றுள்ளார்கள் மற்றும் 92 கேண்டிடேட்கள் வேலைவாய்ப்பு பெற்றுவிட்டனர்.
இடம்: போபால், மத்தியப் பிரதேசம்
நிதிநிலை கல்வியறிவை ஊக்குவித்தல்: பணமில்லா பரிவர்த்தனைை
எம்.எம்.எஃப்.எஸ்.எல் பிராந்திய மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை விநியோகித்தது, அவற்றை விநியோகிக்கும் முன் துண்டுப்பிரசுரங்களில் உள்ள உள்ளடக்கத்தை விளக்குகிறது.
குறிக்கோள்: வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக்குறைப்பு ஆகியவற்றிற்கு கிராமப்புற மக்களை சரியான முறையில் அணுகுவது மிக முக்கியமாகும். பணமதிப்பிழப்பால் மக்களை, வங்கி / பரிவர்த்தனை - பணமில்லா / ஸ்மார்ட் பணமாக பயன்படுத்த மாற்றியுள்ளது. எனவே, பல்வேறு கேஷ்லஸ் பரிவர்த்தனை முறைகள் குறித்து தனிநபர்களுக்கு உணர்த்துவதற்காக நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு லேஷ்லஸ் முறைகளைப் பின்பற்றுவது அவசியமானதாகும்.
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: பாதி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள்.
- மறைமுக பயனாளிகள்: வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், விற்பனையாளர்கள், பார்ட்னர்கள் மற்றும் பணியாளர்கள் போன்ற முதலீட்டாளர்கள்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: எம்.எம்.எஃப்.எஸ்.எல் 7 மாநிலங்களில் கேஷ்லஸ் திட்டத்தை செயல்படுத்தியது.
இடம்: மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, ஆந்திரா
கல்வித்துறையை வலுப்படுத்துதல்: ஞான்தீப் - நகராட்சி பள்ளிகளுக்கு வருகைை
நகராட்சி பள்ளிகளின் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் முயற்சிகளை எம்.எம்.எஃப்.எஸ்.எல் மேற்கொண்டுள்ளது. நகராட்சி பள்ளிகள் கல்வியை வழங்குவதில் முதன்மையாக இருப்பதால், உயர் கல்வியை மேம்படுத்துவதற்கு அவற்றை வலுப்படுத்துவது அவசியம். எம்.எம்.எஃப்.எஸ்.எல் ஊழியர்கள் நகராட்சி பள்ளிகளுக்கு சென்று பள்ளி பைகள், தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் தொட்டிகள், படுக்கை விரிப்புகள், போர்வை, குளிர் காலத்திற்கான உடைகள், எழுதுபொருள், நீர் சுத்திகரிப்பு, பழங்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு விநியோகித்தனர். அவர்களுக்காக விளையாட்டு, வரைதல் போட்டிகள் போன்றவற்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். .
குறிக்கோள்: எம்.எம்.எஃப்.எஸ்.எல் ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகள் வழங்கும் அடிப்படை வசதியை வலுப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம், எம்.எம்.எஃப்.எஸ்.எல் அதன் பணியாளர்கள் தரமான கல்வியை கற்பதில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துகிறது.
ததிட்டத்தின் காலவரைை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஜனவரி வரை
பயனாளிகள்: நகராட்சி பள்ளி அல்லது ஜிலா பரிஷத் பள்ளி போன்ற அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் பள்ளிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது, மாணவர்களுடன் உரையாடலும் நடைபெற்றது.
பயனாளிகள் ஒட்டுமொத்த எண்ணிக்கை: எம்.எம்.எஃப்.எஸ்.எல் 19,500 க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்ததுவிட்டது.
இடம்: பான் இந்தியா
சுகாதார பரிசோதனை முகாம்கள்
MMFSL இலவச சுகாதார பரிசோதனை முகாமான பான் இந்தியாவை நலிந்த மக்களுக்காக நடத்துகிறது, இதில் நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் கண் பரிசோதனையும் நடக்கிறது. இலவச ஆலோசனை, நோய் கண்டறிதல்களுக்கு பிறகு மருந்துகளும் வழங்கப்படுகிறது. இது மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் நன்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் குழுவால் முகாம் நடத்தப்படுகிறது.
குறிக்கோள்: MMFSL-ஆல் நடத்தப்படும் சுகாதார முகாம்கள் கிராமப்புற மக்களுக்கு இலவசமாகத் தரமான அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டத்தின் காலவரை: ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் ஜனவரி வரைை
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ், கண் பிரச்சனைகள் முதலியனவற்றால் அவதிப்படும் கிராமப்புற மக்கள்.
- மறைமுக பயனாளிகள்: இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் சமுதாயம் மற்றும் குடும்பங்கள்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கைை: MMFSL, 15,000 பயனாளிகளுக்கு மேல் அடைந்துள்ளது
இடம்: பான் இந்தியா்
கடந்த நான்கு ஆண்டுகளில், எம்.எம்.எஃப்.எஸ்.எல் தனது ஆதரவை லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு வழங்கிவருகிறது. இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமாகும், இதில் நாட்டின் தொலைதூர மாவட்டங்களுக்கு ரயில் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றது. லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் கிராமப்புற மக்களின் உடல் ரீதியான குறைபாடுகளுக்கு உயர் தரமான அறுவை சிகிச்சை வசதிகளை வழங்குகிறது, ஏனெனில் அத்தகைய வசதிகளுக்கான அணுகளலும் தரமும் குறைவாக உள்ளது. வழங்கப்படுகின்ற வசதிகளில், பிளவு உதடு, காது, கண், கால்-கை வலிப்பு, பல் குறைபாடுகள் போன்ற குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள் அடங்கும்.
குறிக்கோள்: கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாததால், நாள்பட்ட வியாதிகளுக்கான நிவாரணம் அளிக்கக்கூடிய எளிய அறுவை சிகிச்சை முறைகளை செய்வது கடினம். லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் இந்த உடல் குறைபாடுகளுக்கு தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் மருத்துவ சேவைகளை வழங்குகிறது.
திட்டத்தின் காலவரை: ஒரு நிதியாண்டில் ஒரு மாதம்
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: கிராமப்புற மக்கள் மருத்துவ சேவைகளை அளிப்பது, குறிப்பாக அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் ஒரு சவாலாக உள்ளது.
- மறைமுகப் பயனாளிகள்: அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: கடந்த மூன்று லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் திட்டங்கள் மூலம், எம்.எம்.எஃப்.எஸ்.எல், விஷன், ஆடியோ, பிளவு உதடு, பல், கால்-கை வலிப்பு மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற நோயறிதலுக்காக சிகிச்சை 20,300 பயனாளிகளை அடைந்துள்ளது.
இடம்: மகாராஷ்டிரா, பீகார், உத்திர பிரதேசம்
ஜீவன்தான்:இரத்த தான முகாம்கள்
ஜீவன்தான், மஹிந்திரா பைனான்ஸ் நடத்திய மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று இரத்த தானம். ஒவ்வொரு ஆண்டும், நிறுவனர் தினத்தன்று, நிதிச் சேவைத் துறைக்கான (எஃப்எஸ்எஸ்) எஃப்எஸ்எஸ் சிஎஸ்ஆர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது, மஹிந்திரா ஃபைனான்ஸ் அதன் அலுவலகங்களில் நாடு முழுவதும் இரத்த தான முகாம்களை நடத்துகிறது.
குறிக்கோள்: தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் இரத்தம் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக இரத்த தான முகாம்கள் நடத்தப்படுகிறது. கிராமப்புற இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எம்.எம்.எஃப்.எஸ்.எல் ஊழியர்களை உணர்த்துவதும், அவர்கள் நிலைமைகளை மேம்படுத்துவதில் பங்களிக்க உதவுவதும் இதன் நோக்கமாகும்.
திட்டத்தின் காலவரை: அக்டோபர் முதல் வாரம். பயனாளிகள்:
Beneficiaries:
- நேரடி பயனாளிகள்: கிராமப்புறங்களில் உள்ள இரத்த வங்கிகள் மக்களுக்கு இரத்த தானம் செய்ய எளிதான முறையில் இல்லை.
- மறைமுகப் பயனாளிகள்: இரத்த தானம் செய்ய முடியாத நிலையில் உள்ள கிராமப்புற சமுதாயங்கள்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை:இந்த முகாமின் மூலம் 15,528 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் மொத்தம் 26,782 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இடம்: பான் இந்தியா
ஆம்புலன்ஸ் நன்கொடை திட்டம்
நிதி ஆண்டு 2014-2015-இல் இருந்து, கிராமப்புற பகுதிகளில் மருத்துவ சேவைகள் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸை நன்கொடையாக MMFSL வழங்கியது.
நோக்கம்: அவசரக் காலங்களில் நோயாளிகளிடம் சென்றடைய மற்றும் மருத்துவ சேவைகளை உடனடியாகக் கிடைக்கச் செய்ய மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக ஆம்புலன்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திட்டத்தின் காலவரை: ஜூலை முதல் டிசம்பர் வரை
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவச் சிகிச்சை வழங்கும் கிராமப்புற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள்/ NGO-கள்.
- மறைமுக பயனாளிகள்: மலிவான மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படும் சமூகங்கள்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: இந்தியா முழுவதும் இதுவரை பல்வேறு NGO–களில் 47 ஆம்புலன்ஸுகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் நன்கொடை திட்டமானது 1,11,500 பயனாளிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடம்: மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம்
மருத்துவ உபகரணங்கள் நன்கொடை திட்டம்
நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவ உட்கட்டமைப்பு மோசமாக உள்ளது. மகிந்திரா ஃபைனான்ஸ் நிதி ஆண்டு 2015-16-இல் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டம் மூலமாக, மகிந்திரா ஃபைனான்ஸ் USG இயந்திரங்கள், மடிக்கக்கூடிய பெண்கள் மருத்துவ மேசைகள், கல்பல்ஸ்கோப்புகள் முதலிய முக்கிய முக்கிய உபகரணங்களை இந்தியக் குடும்பக் கட்டுப்பாடு சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட உபகரணங்கள் ஒரு இடத்தில் நோயாளிகளுக்குக் கிடைக்கும் மானிய வசதிகளை அதிகரிப்பதன் மூலம் மருத்துவமனைகளில் நேர்மறை மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
கிராமப்புற பகுதிகளில் நன்கு நிறுவப்பட்ட இரத்த வங்கிகளில் மைய அமைவிற்காகத் தேவைப்படும் உட்கட்டமைப்பைக் கொள்முதல் செய்வதன் மூலம் தலசீமிய பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்காக திங் அறக்கட்டளைக்கு நாங்கள் நிதி உதவியையும் வழங்குகிறோம். கூடுதலாக, தற்போது உள்ள மையங்களுக்காக தலசீமிய உள்ள குழந்தைகளின் ஹீமோகுளோபின் மட்டத்தைப் பராமரிக்க உதவுவதற்காக இரும்பு செலேஷன் மாத்திரைகள் போன்ற மருந்துகளையும் நாங்கள் வழங்குகிறோம். கிராமப்புற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பராமரிப்பு மையங்கள் இங்குள்ள வசதிகளைப் பெறுவதற்காக சில நெரங்களில் பல நூறு கிலோ மீட்டர் பயணித்து வரும் பயனாளர்களுக்கு வழக்கமான கவனிப்பு, ஆதரவு மற்றும் ஆலோசனையை வழங்குகிறது. இந்த திட்டமானது இந்த குழந்தைகளின் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை இளம் வயதான 6 வருடங்களுக்கு மேல் அதிகரிக்கிறது.
நோக்கம்: கிராமப்புற இந்தியாவில் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தாழ்த்தப்பட்ட கிராமப்புற மக்களுக்குத் தரமான சுகாதாரத்தை வழங்குதல்
திட்டத்தின் காலவரை: ஜனவரி முதல் டிசம்பர் வரை
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்: அடிப்படை மருத்துவ சேவைகளைப் பெறாத கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்கள்.
- மறைமுக பயனாளிகள்: இந்த உபகரணங்கள் மூலம் அடிப்படை மருத்துவ சேவைகளைப் பெறுபவர்களின் குடும்பங்கள்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: மருத்துவ உபகரணங்கள் நன்கொடை திட்டத்தின் இரண்டு முயற்சிகளின் கீழும் இன்று வரை 3,00,000-க்கு மேலானோர் பயனடைந்துள்ளனர்.
இடம்: ஹரியானா, ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், குஜராத்
தாய் மற்றும் குழந்தை சுகாதார (எம்சிஹெச்) திட்டம்
எம்.எம்.எஃப்.எஸ்.எல் எஃப்.பி.ஏ இந்தியாவுடன் இணைந்து சிறந்த ஊட்டச்சத்து மூலம் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒரிசாவில் முறையே அமைந்துள்ள சிங்பும், பால்கர் / பிவாண்டி மற்றும் புவனேஸ்வர் ஆகிய 30 கிராமங்களில் அதிகம் தேவை.
குறிக்கோள்: இளம் பருவ பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதன் மூலம் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே தாய் மற்றும் குழந்தை இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையைக் குறைப்பதற்கும் அவர்களின் வாழ்க்கையில் தரத்தை மேம்படுத்துவதற்கும்.
திட்டத்தின் காலவரை: ஆகஸ்டிலிருந்து செப்டம்பர்வரை
பயனாளிகள்:
- நேரடி பயனாளிகள்:இந்த திட்டம் 15000 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், 6 வயதுக்குட்பட்ட 18000 குழந்தைகள், 15000 இளம் பருவ பெண்கள் மற்றும் சிறுவர்களை வெளிக்கொணரவும், இரண்டு வருட காலத்திற்குள் மூன்று லட்சம் மக்களுக்கு தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பவும் திட்டமிட்டுள்ளது.
- மறைமுகப்பயனாளிகள்: நேரடி பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள்.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: 11,263 பேருக்கு மேல்; அவற்றில், 9,569 (78.17%) திட்டத்தின் கீழ் வெளிகொணரப்பட்டு MCH சேவைகளைப் பெற்றுள்ளன.
இடம்: ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒரிசா
ஸ்வச் பாரத் அபியான்: தூய்மை இயக்கம்
ஸ்வச் பாரத் அபியான் திட்டம் பிரதம மந்திரி நரேந்திர மோடியால் அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் உள்ள ராஜ்காட்டில், இந்தியாவை சுத்தமானதாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது. இதன் இலக்கானது கழிவறைகள், திட மற்றும் திரவ கழிவுகளை அகற்றும் அமைப்புகள் உட்படச் சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை அனைத்து வீடுகளுக்கும் வழங்குதல் அத்துடன் அக்டோபர் 2, 2019-க்குள் ஒட்டுமொத்த கிராம தூய்மையை அடைவதாகும். இது நமது தேச தந்தைக்கு அவரது 150-வது பிறந்த நாளில் பொருத்தமான அஞ்சலி ஆகும். இந்த திட்டத்தை வெற்றியடையச்செய்யப் பிரதம மந்திரியே மிகவும் உயிர்ப்பான பங்களிப்பது என்பது குறிப்பிடத்தக்கது; ராஜ்காட்டில் அவராகவே வீதியைச் சுத்தம் செய்து திட்டத்தைத் துவக்கி வைத்தார். எனினும், இத்திட்டமானது அரசின் பொறுப்பு மட்டும் இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வச் பாரத்தை அடைவதற்காகத் தேசத்தைச் சுத்தமாக வைத்திருப்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.
நோக்கம்:
- பழக்கவழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- சமூக நிலையில் கழிவுகளை அகற்றத் தேவையான ஏற்பாடுகளை வழங்குதல்.
திட்டத்தின் காலவரை: ஜூன் முதல் ஜனவரி வரை
இடம்: இந்தியா முழுவதும்
ஹரியாலி திட்டம்: மரம் நடும் நடவடிக்கை
MMFSL சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மரம் நடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மரக்கன்றுகளானது சமூகத்தினர் பொறுப்பாக இருந்து அவைகளை வளர்க்கக்கூடிய கல்லூரிகள்/பள்ளிகள்/அனாதை இல்ல வளாகங்களில் நடப்பட்டது.
நோக்கம்: MMFSL கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன் மூலம் பரந்த அளவிலான காடழிப்பின் விளைவுகளைத் தனிக்க நினைக்கிறது. நாட்டை பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகப் பணியாளர் ஈடுபாட்டை ஊக்குவிக்க மற்றும் அவர்களை MMFSL –இன் குறிக்கோளுடன் சீரமைக்கவும் MMFSL நினைக்கிறது.
பயனாளிகள்: பள்ளிகள், அரசு மற்றும் சமூகங்கள்.
திட்டத்தின் காலவரிசை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: MMFSL பணியாளர்கள் 6,58,000 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுள்ளனர்.
திட்டத்தின் இடம்: இந்தியா முழுவதும்
சமன்டர்: பெரியவர், மாற்றுத் திறனாளி மற்றும் அனாதைகளுக்கு உதவுதல்
புறக்கணிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாத சமூகத்தின் அத்தகைய பிரிவுகளுக்கு உதவுவதற்கான ஓர் முக்கியமான முயற்சியாக இதை MMFSL கருதுகிறது.
அ) அனாதை/முதியோர் இல்லம்/ மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம்
தனது பணியாளர்கள் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களுக்கு வருகை தர MMFSL ஏற்பாடு செய்கிறது. அத்தகைய பல்வேறு குழுக்களுக்கு அத்தகைய வருகைகளைத் தருவதின் நோக்கம் என்னவென்றால், நேரத்தைச் செலவிடுவது மற்றும் அத்துடன் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் உதவி செய்வதாகும். MMFSL –இன் பிராந்திய CSR குழுவானது வருகை தரப் போகும் நிறுவனத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக ஓர் தேவை மதிப்பீட்டை நடத்தும்.
நோக்கம்: அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களின் அடிப்படை வசதிகளை வலுப்படுத்துவதற்காக MMFSL இந்த செயல்பாட்டை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த செயல்பாடு அவர்களது பணியாளர்களிடம் பெரிய சமுகத்தால் பெரும்பாலும் கவனிக்கப்படாத அனாதைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டத்தின் காலவரை: ஜூன் முதல் ஜனவரி வரை
பயனாளிகள்: MMFSL, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளுக்கு அவர்களது உதவியை வழங்க மற்றும் பெரியவர்கள், அனாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் பணியாற்ற நினைக்கிறது.
பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை: 4466 குழந்தைகள் மற்றும் 1290 பெரியவர்களுக்கு MMFSL உதவியுள்ளது.
இடம்: இந்தியா முழுவதும்
Email: [email protected]
Toll free number: 1800 233 1234(திங்கள்–ஞாயிறு, காலை 8மணி முதல் இரவு 10மணி வரை)
(Except National Holidays)
WhatsApp number: 7066331234
இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ் உங்களைச் சுற்றி கிளை
For illustration purpose only
Total Amount Payable
50000