எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக புதுமையான நன்மை பயக்கும் தயாரிப்புகளை உருவாக்க எல்லைகளை விரிவாக்குகிறோம். நமது கோர் வேல்யூஸ் நிகழ்காலத்தில் வளரும் அதே வேளையில் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் கவனம் செலுத்துகின்றன. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒன்றுசேர்த்து சிறந்த சேவையை வழங்குகிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்களால் மட்டுமே நாங்கள் வாழ்கிறோம், வளர்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நாங்கள் எப்போதும் விரைவாகவும், கண்ணியத்தோடும், திறமையாகவும் பதிலளிப்போம்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, பணத்திற்கு மதிப்பளிக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் தரத்திற்கே முதலிடமாகும். எங்கள் வேலை, எங்கள் தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான எங்களது தொடர்புகளில் எங்களை வழிநடத்தும் முக்கிய மதிப்பாக தரத்தையே கொண்டுள்ளோம். நாங்கள் 'முதல் முறையே சரியாகச் செய்தல்' என்னும் கோட்பாட்டை நம்புகிறோம்.
நாங்கள் எப்போதுமே சிறந்தவர்களையே வேலைக்கு அமர்த்தினோம், அவர்களுக்கு வளர்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் வழங்கினோம். நாங்கள் புதுப்புனைவு, நியாயமான ஆபத்து-எதிர்கொள்ளலுக்கு ஆதரவளிக்கிறோம் , செயல்திறனை எதிர்பார்க்கிறோம்.
கடந்த காலத்தைப் போலவே, நமது நாட்டின் தேவைகளுடன் ஒத்திசையும் நீண்ட கால வெற்றி முயற்சியைத் தொடர்வோம். எங்கள் நெறிமுறை வணிக தரங்களைச் சமரசம் செய்யாமல் நாங்கள் இதைச் செய்வோம்.
நாங்கள் தனிநபர் கௌரவத்தை மதிக்கின்றோம், கருத்து வெளிப்படுத்தும் உரிமைகளை நிலைநிறுத்துகிறோம் மேலும் மற்றவர்களின் நேரத்தையும் முயற்சிகளையும் மதிக்கின்றோம். எங்கள் செயல்களால், நேர்மை, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறோம்.
இந்தியாவில் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்டது அல்ல. தெளிவான பார்வை மற்றும் உறுதியான முயற்சிகளால் சில போட்டிக்குரிய திறன்களை நாங்கள் உருவாக்கினோம், அவை எங்களைத் தனித்துக்காட்டுவதோடல்லாமல் அதிக ஆற்றலோடும் தன்னம்பிக்கையோடும் முன்னேற எங்களுக்கு உதவுகின்றன.
ஊழியர்களின் பலம்
எங்கள் ஊழியர்கள் திறமையானவர்கள் மட்டுமல்ல, அவர்களின் சமூகச் சூழல் மற்றும் நிலைமைகள் பற்றியும் அறிந்தவர்கள். எனவே, அவர்கள் உள்ளூரைப் பற்றி அறிந்த விவரங்களின் உதவியுடன் வாடிக்கையாளர் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்ய முடியும். நாங்கள் எங்கள் டீலர்களுடன் இணக்கமான உறவைப் பேணுகிறோம், இது எங்கள் ஊழியர்களை எல்லா நேரங்களிலும் முன் முனைப்புடனுடனும் திறமையாகவும் செயல்பட உதவுகிறது.
ஆழமான அறிவு
தொழில்துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பதால், கிராமப்புற மற்றும் ஓரளவு வளர்ச்சிபெற்ற நகர்ப்புற சந்தைகள் பற்றிய விரிவான புரிதலை நாங்கள் சேகரித்துள்ளோம். இந்தப் புரிதல் எங்கள் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்க உதவுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் தற்போதைய நிலைக்குப் பதிலாக அவர்களின் எதிர்காலத் திருப்பிச் செலுத்தும் திறன்களின் அடிப்படையில் கடன்களை வழங்கும் சிலரில் நாங்கள் ஒருவராக இருப்பதற்கும் இதுவே காரணம்.
வணிக மாதிரி
அடிப்படை மட்டங்களில் திறன் தொகுப்புகளை உருவாக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். அந்தத் துடிப்புக்கேற்ப ஏற்ப, நாங்கள் 20000- க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்கள் வளர உதவுகிறோம்.
அதிக வாடிக்கையாளர்கள்
எங்கள் மிகப்பெரிய பலம் 4 மில்லியனுக்கும் அதிகமான மற்றும் மேலும் வளர்ந்து வரும் திருப்தியடைந்த வாடிக்கையாளர் எண்ணிக்கைதான். கிராமப்புற மற்றும் ஓரளவு வளர்ச்சிபெற்ற நகர்ப்புற இந்தியாவின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான எங்கள் முடிவில்லாத அர்ப்பணிப்புக்கு அவை சான்றாகும்.
வலுவான மரபு
மஹிந்திரா குழுமத்தின் மரபு மற்றும் நாடு முழுவதும் உள்ள டீலர்களுடனான நெருங்கிய தொடர்பு எங்கள் சக நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது எங்களுக்கான பலமாகும்.
வாடிக்கையாளர் தேவைகள்
எங்கள் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்று விரைவான கடன் பட்டுவாடா செயல்முறை ஆகும். குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் அதிக நெகிழ்வுத்தன்மையுடன், எங்கள் கடன்கள் வழக்கமாக 2 நாட்களுக்குள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. கடன்களை திருப்பிச் செலுத்தும்போது அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் அட்டவணைகளும் எங்களிடம் உள்ளன.
பரந்த வலையமைப்பு
நாடு முழுவதும் உள்ள 1380+ கிளைகள் கொண்ட எங்கள் விரிவான வலையமைப்பு உங்களுக்கு அருகில் ஒரு மஹிந்திரா ஃபைனான்ஸ் கிளை இருப்பதை உறுதி செய்கிறது.
மின்னஞ்சல்: [email protected]
கட்டணமில்லா எண்: 1800 233 1234 (திங்கள்-சனி, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை)
இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ்
For illustration purpose only
Total Amount Payable
50000
*