கடனுக்கான விண்ணப்பம் மற்றும் அவற்றை செயல்முறைப்படுத்துதல்
கடன் மதிப்பீடு மற்றும் விதிமுறைகளும் நிபந்தனைகளும்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ள மாற்றங்கள் உட்பட கடன்களின் பட்டுவாடா
பொது
குறை தீர்க்கும் வழிமுறை
புகார் / குறை ஏதேனும் இருந்தால், வாடிக்கையாளர் அவரது புகாரை பின்வரும் முறைகள் ஏதேனும் ஒன்றின் மூலம் செய்யலாம்.
வாடிக்கையாளர் தன் புகாரை வலைத்தளம் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பதிவு செய்யத் தேர்ந்தெடுத்தால், அவரது புகாரைப் பெற்றதற்கான ஒப்புகையுடன் அவரது புகார் எண் மற்றும் புகார் தீர்க்கப்படுவதற்காக எதிர்பார்க்கப்படும் காலம் ஆகியவற்றைத் தெரிவித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல்/எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.
இந்தப் புகார்களை மும்பையில் உள்ள எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு நோடல் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி (புகார் கண்காணிப்புத் தொகுதி மூலம்) பெறுவார். இந்தப் புகார்கள் பிறகு தீர்வுக்காக அந்தந்த அமைவிடம் மற்றும் செயற்பாட்டிற்கு அனுப்பப்படும்.
ஒருவேளை வாடிக்கையாளர் புகாரை கிளை மூலம் பதிவு செய்ய விரும்பினால், அவர் எழுத்துப்பூர்வமாக புகாரை அளிக்கக் கோரப்படுவார். வாடிக்கையாளரால் எழுதமுடியாத பட்சத்தில், கிளைக் கணக்காளர் புகார் தாளில் வாடிக்கையாளரின் விவரங்களை நிரப்பி, எதிர்பார்க்கப்படும் தீர்வுக் காலத்துடன் அவரது தனிப்பட்ட புகார் எண்ணை வழங்குவார். பயனுள்ள தீர்வு மற்றும் மேல்மட்டத்திற்கு உயர்த்துதலை உறுதிசெய்ய இந்தப் புகார்களை நோடல் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி தொடர்ந்து கண்காணிப்பார்.
பெறப்பட்ட அனைத்துப் புகார்களும் பதிவு செய்யப்பட்டு தீர்க்கப்படுவதை நிறுவனம் உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், புகார்கள் எதுவும் தீர்க்கப்படாமல் விடுபடாமலிருப்பதை உறுதிசெய்யும் வகையில் இதற்குப் பொறுப்பான மூத்த மட்டங்களுக்கு திறம்பட கண்காணிப்பு / உயர்த்துதல் வழிமுறையை உறுதி செய்யும்.
திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக கிளைகளின் தீர்மானங்களில் இருந்து எழும் சர்ச்சைகள் அனைத்தும் செவிமடுக்கப்பட்டு குறைந்தபட்சம் அடுத்த உயர் மட்டத்தில் தீர்க்கப்படும் ஆதலால், பின்வரும் ‘குறைதீர்க்கும் முறைமை’ செயலில் உள்ளது
புகார் மட்டம் | குறைதீர்க்கும் மட்டம் |
---|---|
கிளை மட்டம் | பிரதேச மட்டம் |
பிரதேச மட்டம் | பிராந்திய மட்டம் |
பிராந்திய மட்டம் | மண்டல மட்டம் |
மண்டல மட்டம் | தலைமை அலுவலக மட்டம் |
புகார் தீர்க்கப்பட்ட பிறகு, புகார் தீர்க்கப்பட்டதை உறுதி செய்யும் மின்னஞ்சல்/எஸ்.எம்.எஸ்-ஐ வாடிக்கையாளர் பெறுவார். இந்த நேரத்தில், புகார் வாடிக்கையாளரின் திருப்திக்கு ஏற்ப தீர்க்கப்பட்டதா இல்லையா என்பதை அவர் உறுதிசெய்ய வேண்டும். வாடிக்கையாளர் மின்னஞ்சல் / எஸ்.எம்.எஸ்-க்கு பதில் அளிக்கவில்லை எனில் புகார் தீர்க்கப்பட்டதாக கருதப்படும்.
நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும், கிளையில் குறைகளை பதிவுசெய்து தீர்க்க பொறுப்பான குறைதீர்க்கும் அதிகாரியின் விவரங்களைப் [பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் (தொலைபேசி/மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி உட்பட)] (கிளை கணக்காளர்) பற்றிய கண்ணுக்குத் தென்படும் டிஸ்பிளே போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளருக்குத் தீர்வைப் பற்றிய மனக்குறை இருந்தால் அக் குறைகளை எவ்வாறு மேலிடத்தில் உயர்த்துவது என்பது பற்றிய மேலும் விரிவான தகவல் (தொடர்பு விவரங்கள் உட்பட) குறிப்பிடப்பட்டிருக்கும். புகார் / ஆட்சேபம் ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கப்படாவிட்டால், வாடிக்கையாளர் பின்வருபவரிடம் மேல்முறையிடலாம்:
வ.எண் | மையம் | என்.பி.எஃப்.சி குறைதீர்க்கும் அதிகாரியின் அலுவலக மைய முகவரி | செயல்படும் பகுதி |
---|---|---|---|
1. | சென்னை | C/o இந்திய ரிசர்வ் வங்கி ஃபோர்ட் கிலேசிஸ், சென்னை 600 001 எஸ்.டி.டி குறியீடு: 044 தொ.பே எண். 25395964 ஃபேக்ஸ் எண். 25395488 மின்னஞ்சல்: [email protected] | தமிழ் நாடு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, லட்சத்தீவு யூனியன் பிரதேசம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் |
2. | மும்பை | C/o இந்திய ரிசர்வ் வங்கி, RBI பைக்குலா அலுவலக கட்டிடம், மும்பை சென்ட்ரல் இரயில் நிலையம், பைகுல்லா, மும்பை-400008, 022 தொ.பே எண். 2300 1280 ஃபேக்ஸ் எண். 23022024 மின்னஞ்சல்: [email protected] | மஹாராஷ்டிரா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசம், டாமன் மற்றும் டையு |
3. | புது தில்லி | C/o இந்திய ரிசர்வ் வங்கி சன்சத் மார்க், புது தில்லி - 110001,- எஸ்.டி.டி குறியீடு: 011 தொ.பே எண். 23724856 ஃபேக்ஸ் எண். 23725218- 23725218 மின்னஞ்சல்: [email protected] | யூனியன் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் |
4. | கொல்கத்தா | C/o இந்திய ரிசர்வ் வங்கி சன்சத் மார்க், 15, நேதாஜி சுபாஷ் ரோடு, கொல்கத்தா -700001- எஸ்.டி.டி குறியீடு: 033 தொ.பே எண். 22304982 ஃபேக்ஸ் எண். 22305899 மின்னஞ்சல்: [email protected] | மேற்கு வங்காளம், சிக்கிம், ஓடிசா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, பீஹார் மற்றும் ஜார்கண்ட் |
வாடிக்கையாளர் புகார் செயல்முறை மற்றும் குறை தீர்க்கும் கொள்கை வழக்கமான இடைவெளிகளில் மதிப்பாய்வு செய்யப்பட்டும்.
என்.பி.எஃப்.சி-க்கள் அளவுக்கு அதிகமான வட்டி வசூலிப்பதைப் பற்றிய புகார்கள்.
நிறுவனம் ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்ப மட்டுமே வட்டி வசூலிக்கிறது. ஒப்பந்த விதிமுறைகள் அனுமதிக் கடிதம் மற்றும் கடன் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் அட்டவனையின்படி இல்லாமல் தவணைகளை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது தவணைத் தேதியிலிருந்து தவணை செலுத்தும் தேதி வரை, மாதம் 3% என்ற விகிதத்தில் அபராத வட்டியை ஈர்க்கும். இந்த வட்டி விகிதம் வாடிக்கையாளருக்குத் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்.பி.எஃப்.சி-க்கள் அளவுக்கு அதிகமான வட்டி வசூலிப்பதன் மீதான ஒழுங்குமுறை
இங்கு எங்கள் கொள்கைகளைப் பார்க்கவும் 'Interest rate and gradation of risk'
நிதியளிக்கப்பட்ட வாகனங்களை மீளப்பெறுவது
நிதியளிக்கப்பட்ட வாகனங்களை மீளப்பெறுவதற்கு கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நிறுவனம் சரியான சட்ட நடைமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது
மின்னஞ்சல்: [email protected]
கட்டணமில்லா எண்: 1800 233 1234 (திங்கள்-சனி, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை)
இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ்
For illustration purpose only
Total Amount Payable
50000
*