டாக்டர் அனிஷ் ஷா மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் 2014-இல் மஹிந்திரா குழுமத்தின் குழுத் தலைவர் (ஸ்ட்ராட்டஜி) ஆக சேர்ந்தார். முக்கிய ஸ்ட்ராட்டஜி முன்முயற்சிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரவு அறிவியல் போன்ற திறன்களைக் கட்டமைத்தல் மற்றும் குழு நிறுவனங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புகள் ஆகியவற்றில் அனைத்து வணிகங்களுடனும் நெருக்கமாக பணியாற்றினார். 2019-இல் அவர் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் குழு சி.எஃப்.ஓ-ஆக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அவரது பொறுப்புகளானவை குழு நிர்வாக அலுவலகத்தின் முழு பொறுப்பு மற்றும் வாகன உற்பத்தித் துறையில் ஆட்டோ மற்றும் ஃபார்ம் பிரிவுகள் தவிர்த்து பிற அனைத்து வணிகங்களின் பொறுப்புமாகும்.
அனீஷ் 2009 முதல் 2014 வரை ஜி.இ. கேபிடல் இந்தியாவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார், அங்கு அவர் எஸ்பிஐ கார்டு கூட்டு முயற்சி உட்பட வணிகத்தின் மாற்றத்திற்கு வழி வகுத்தார். ஜி.இ-இல் அவரது பணி 14 ஆண்டுகள் நீடித்தது, இந்த காலகட்டத்தில் அவர் ஜி.இ கேப்பிடல் US மற்றும் உலகளாவிய பிரிவுகளில் பல தலைமைப் பதவிகளை வகித்தார். குளோபல் மார்ட்கேஜ் இயக்குநராக, 33 நாடுகளில் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இடரை நிர்வகிப்பதற்கும் பணியாற்றினார். ஜி.இ. மார்ட்கேஜ் இன்சூரன்ஸின் மூத்த துணைத் தலைவராக (சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு மேம்பாடு), அவர் பல்வேறு வளர்ச்சி முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் ஜி.இ- இலிருந்து ஒரு உப நிறுவனம் உருவாக, ஒரு ஐ.பி.ஓ-இற்கு வணிகத்தைத் ஆயத்தம்செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார். ஜி.இ- இல் அவர் பணியாற்றத் தொடங்கிய போது, அனீஷ் ஸ்ட்ராடெஜி, இணையவழி மற்றும் சேல்ஸ் ஃபோர்ஸ் செயல்திறனை வழிநடத்தினார், மேலும் ஜி.இ-க்குள் டாட்-காம் வணிகத்தை நடத்துவதில் தனித்துவமான அனுபவத்தைப் பெற்றார். "டிஜிட்டல் காக்பிட்" ஐ உருவாக்குவதில் சிக்ஸ் சிக்மாவை சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக அனிஷ் ஜி.இ- இன் மதிப்புமிக்க லூயிஸ் லாடிமர் விருதையும் பெற்றார்.
ஜி.இ- க்கு அப்பால் உலகளாவிய வணிகங்களுடன் அவருக்கு மாறுபட்ட அனுபவமும் உள்ளது. அவர் பாங்க் ஆப் அமெரிக்காவின் யு.எஸ். டெபிட் புராடக்ட்ஸ் வணிகத்தை வழிநடத்தினார், அங்கு அவர் ஒரு புதுமையான வெகுமதி திட்டத்தை தொடங்கினார், கட்டணத் தொழில்நுட்பத்தில் பல முயற்சிகளை வழிநடத்தினார் மற்றும் வாடிக்கையாளருக்கான மதிப்பை அதிகரிக்க வங்கி முழுவதும் பல்வேறு குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றினார்.
பாஸ்டனில் உள்ள பெயின் & கம்பெனியில் ஒரு ஸ்ட்ராடெஜி ஆலோசகராக, வங்கி, ஆயில் ரிக்ஸ், பேப்பர், பெயிண்ட், ஸ்டீம் பாய்லர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட பல தொழில்துறைகளில் பணியாற்றினார். அவரது முதல் பணிப்பங்கு மும்பையில் உள்ள சிட்டி வங்கியில் தொடங்கியது, அங்கு அவர் வர்த்தக சேவைகளின் உதவி மேலாளராக வங்கி உத்தரவாதங்கள் மற்றும் கிரெடிட் கடிதங்களை அவர் வழங்கினார்.
அனீஷ் கார்னகி மெல்லனின் டெப்பர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பி.எச்.டி பட்டம் பெற்றார், அங்கு கார்ப்பரேட் நிர்வாகத் துறையில் அவர் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தார். கார்னகி மெல்லனில் முதுகலைப் பட்டமும் பெற்றார், அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்-இல் நிறுவன மேலாண்மையில் முதுகலை டிப்ளோமா பெற்றார். வில்லியம் லாடிமர் மெல்லன் உதவித்தொகை, ஐ.ஐ.எம்.ஏ.யில் தொழில் கல்வி உதவித்தொகை, நேஷனல் டேல்ன்ட் சர்ச் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார்.